பணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி! - நவாஸ்கனி நறுக்... | Ramanathapuram IUML MP Navas Kani interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

பணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி! - நவாஸ்கனி நறுக்...

“பதவியை பர்சேஸ் செய்துவிட்டார்” என்கிற குற்றச்சாட்டை தகர்த்து, ராமநாதபுரத்தைக் கைப்பற்றியிருக்கிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ்கனி. இந்த வெற்றி குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“காசிக்கு நிகரான இந்துக்களின் புனிதத்தலமாகத் திகழும் ராமநாதபுரம் தொகுதியில் உங்கள் வெற்றி சாத்தியமானது எப்படி?’’

“காசி, பி.ஜே.பி-யின் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால் ராமேஸ்வரம், முஸ்லிம் லீக்கின் நவாஸ்கனியைத் தேர்ந் தெடுத்துள்ளது. இது இந்தியாவின் பன்முகத் தன்மையையும் தமிழகத்தின் மதச்சார்பின்மையையும் காட்டுகிறது. தவிர, இது என் சொந்தத் தொகுதி. நான் தொகுதியின் அனைத்து மக்களுக்கும் உரிமையானவன், உண்மையானவன். மக்கள் என்மீது வைத்த நம்பிக்கை மற்றும் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் உழைப்பு... இவையே இந்த வெற்றியைத் தீர்மானித்தது.’’