கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே! | Coimbatore CPI(M) MP P.R.Natarajan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே!

பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே தோழர் நடராஜன் அதிரடி...

ந்துத்துவா வாக்குவங்கி கணிசமாக இருப்பதாகக் கருதப்படும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் 1,79,000 வாக்குகள் வித்தியாசத்தில் பி.ஜே.பி-யின் வி.ஐ.பி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவில், பி.ஜே.பி-யை நேரடியாக வீழ்த்திய ஒரே ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் மட்டுமே! இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்குச் செல்லவிருக்கும் நடராஜனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கருத்துக்கணிப்புகள் பலவும் ‘சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறப் போகிறார்’ என்றே வெளியாகின. வாக்கு எண்ணிக்கையின்போதும் தொடக்கத்தில் சி.பி.ஆர் முன்னிலையில் இருந்ததாகத் தகவல் வெளியானதே?”

“கருத்துக்கணிப்புகள் பலவாறு வந்தபோதிலும் எங்கள் வெற்றியில் நம்பிக்கைக் கொண்டிருந்தோம். ஏனெனில், தமிழகத்தில் மோடிக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். அதேசமயம், வாக்கு எண்ணிக்கையின்போது சூலூர் சட்டமன்றத் தொகுதியில், ஒரு பூத்தில் மட்டுமே சி.பி.ராதாகிருஷ் ணன் முன்னிலையில் இருந்தார். மற்ற அனைத்துச் சுற்றுகளிலும் நாங்களே முன்னிலை வகித்தோம்.”