சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்! | YSR Congress MLA Roja interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

சோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்!

ரோஜா அதிரடி

ட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இமாலய வெற்றிபெற்று, எதிர்க் கட்சிகளை அலறவிட்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகியிருக்கும் நடிகை ரோஜா, ஜெகனின் புதிய ஆட்சியில் அமைச்சராகவிருக்கிறார். சினிமா நாயகியாகக் கலக்கிய ரோஜா, தற்போது நகரி தொகுதியின் நாயகி. பரபரப்பான சூழலுக்கு இடையே, பொறுமையாக பதில் அளித்தார் ரோஜா.

“இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?”

``எங்கள் கட்சிக்கு 130 இடங்கள் கிடைக்கும் என்றுதான் நினைத்தோம். ஆனால், 151 இடங்களில் வென்றிருக்கிறோம். இன்ப அதிர்ச்சி இது.”