ராகுலை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை! - புதுச்சேரி முதல்வர் உருக்கம் | Puducherry CM Narayanasamy interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ராகுலை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை! - புதுச்சேரி முதல்வர் உருக்கம்

தேசிய அளவில் காங்கிரஸ் சந்தித்த பின்னடைவால் வருத்தத்தில் இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவர். புதுச்சேரியில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றியைக் கூறி, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். டெல்லி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, புதுச்சேரி திரும்பிய நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“புதுச்சேரியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதைப் பற்றி?”

“பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டுமா, மோடி வரவேண்டுமா என்று நாங்கள் முன்வைத்த கேள்வியாலும் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களாலும் மக்கள் கொடுத்த வெற்றி இது. அதேபோல மத்திய அரசு நிதி தர மறுத்தது, நலத்திட்டங்களைத் துணை நிலை கவர்னர் கிரண் பேடி முடக்கியது, கவர்னர் மாளிகை முன் ஆறு நாள்கள் இரவு பகலாக நாங்கள் போராட்டம் நடத்தியது... இவை எல்லாம் எங்கள் வெற்றிக்கான காரணங்கள்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க