திவால் ஆகிவிட்டதா அ.தி.மு.க வாக்கு வங்கி? | ADMK Vote Bank decrease? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/06/2019)

திவால் ஆகிவிட்டதா அ.தி.மு.க வாக்கு வங்கி?

‘அ.தி.மு.க-வின் 47 ஆண்டு கால சரித்திரத்தில் மிக மோசமான தோல்வி... இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்வி’ இப்படித்தான் வர்ணிக்கப்படுகிறது. அ.தி.மு.க-வுக்கு மகத்தான வெற்றிகளும் மோசமான தோல்விகளும் புதிதல்ல! எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தலைமை வகித்த காலங்களில்கூட அந்தக் கட்சி தோற்றிருக்கிறது. ஆனால், இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 21 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி என்கிற ஒற்றைத் தொகுதியில் மட்டுமே ஜெயித்திருக்கும் அ.தி.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் 18.48. ‘இவ்வளவு குறைவான வாக்குகளை அ.தி.மு.க எப்போதும் வாங்கியதில்லை. அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி திவால் ஆகிவிட்டது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இது உண்மையா? இதைப் புரிந்து கொள்ள சில கணக்குகளைப் பார்க்கலாம்.