நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்! - அதிரடிக்குத் தயாராகும் நேரு | DMK Senior Leader K.N.Nehru interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/06/2019)

நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்! - அதிரடிக்குத் தயாராகும் நேரு

ட்சியைக் கைப்பற்றக் காய்நகர்த்துகிறது தி.மு.க...  அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு தூண்டில் போடப்பட்டிருக்கிறது... என்று பரபரப்பாகப் பற்றி எரிகிறது தமிழக அரசியல். குறிப்பாக, தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு இந்த அசைன்மென்ட்டில் தளபதியாக செயல்படுகிறார் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறது... இந்த நிலையில்தான் நேருவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘கருணாநிதியுடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்த நீங்கள், தற்போது ஸ்டாலினுடனும் அதே நெருக்கத்துடன் பணியாற்றுகிறீர்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?’’

“கூட்டணிக் கட்சிகளை அனுசரித்துப் போவது, வேட்பாளர்களைத் தேர்வுசெய்வது உள்ளிட்ட யுக்திகளை கடந்த 20 வருடங்களாகக் கலைஞரிடம் மிக நேர்த்தியாகக் கற்றுக்கொண்டு, அதன்படி செயல்பட்டு வருகிறார் தலைவர் ஸ்டாலின். பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரையும் அவ்வளவு சுலபத்தில் பாராட்டிவிட மாட்டார் கள். அப்படிப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரே ஸ்டாலினை மனமாரப் பாராட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.கே ரெங்கராஜனும் ஸ்டாலினைப் பாராட்டுகிறார். இதைவிட வேறென்ன வேண்டும்...?”