குறைந்த செலவில் நீர்வழிச்சாலை... கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு? | Connecting rivers through national waterways - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

குறைந்த செலவில் நீர்வழிச்சாலை... கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?

‘கோதாவரி நதியையும் காவிரி நதியையும் இணைத்துத் தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதுதான் என் முதல் பணி’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அதே நேரத்தில், ‘இது சாத்தியமில்லாத திட்டம். வெற்று அரசியல் முழக்கம்’ என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். ‘நதிகளை இணைப்பது அபத்தமானது. அது சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்’ என்று சூழலியலாளர்கள் முழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நதிநீர் இணைப்புக்கு மாற்றாக நீர்வழிச்சாலைத் திட்டத்தை முன் வைக்கிறார், முன்னாள் பொறியாளர் ஏ.சி.காமராஜ்.

பொதுப்பணித் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்று தற்போது, நீரியல் ஆய்வாளராக இருக்கிறார், காமராஜ். மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினராக இருக்கும் காமராஜ், தமிழக அளவிலும் இந்திய அளவிலும் நீர்வழிச்சாலை பற்றிய திட்ட வரைவு தயாரித்து அதை நடைமுறைப்படுத்துமாறு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். நீர்வழிச்சாலை குறித்து காமராஜிடம் பேசினோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க