‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! - ஆஸ்திரிய ஆச்சர்யம்... | Austria Intelligence systems - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! - ஆஸ்திரிய ஆச்சர்யம்...

ஸ்திரியா நாட்டின் பிரதான தொழிலே உளவு பார்ப்பதுதான். உளவாளிகளின் சொர்க்க பூமி என்றும் அந்த நாட்டைச் சொல்வார்கள். எந்த நாட்டு உளவாளியாக இருந்தாலும் சரி, ஆஸ்திரியா-வுக்குள் சுதந்திரமாக உலவ முடியும். அந்த அளவுக்கு உளவாளிகளுக்கு உதவுகின்றன அங்கிருக்கும் உளவு அமைப்புகள். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி ஆட்சியை இழந்திருக்கிறது, வலதுசாரிக் கூட்டணி.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ சமீபத்தில் வெளிவந்து, ஆஸ்திரிய நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவில், ‘நான் ரஷ்ய தொழிலதிபருக்கு நெருக்கமானவள்’ என்று சொல்லி அறிமுகமாகும் ஒரு பெண்ணிடம், ‘எனக்கு வெற்றிபெற உதவி னால் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவேன்’ என்று பேரம் பேசி இருக்கிறார், ஆஸ்திரியாவின் துணை பிரதமர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ராஷ்.

அந்த வீடியோ வெளிவந்து சர்ச்சை கிளம்பிய பிறகு, ‘ஓர் அழகான பெண்ணை ஈர்க்க, குடி போதையில் உளறினேன்’ என்று கூறிச் சமாளித்தார் ஹெய்ன்ஸ். ஆனாலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அவர் பதவி விலகினார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தப் பிரச்னை வெடித்ததால், வலதுசாரிகள் சங்கடத்தில் நெளிந்தனர். நிலைமையைச் சமாளிக்க, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெலென்.

ஆனால், ஆஸ்திரிய மக்கள் இந்த ரகசியச் செயலைக் கண்டு மலைக்கவில்லை. ஏனெனில், உளவு பார்ப்பதுதான் அங்கு சர்வசாதாரண மாயிற்றே? உலகின் உளவு மையமாக ஆஸ்திரியா மாறியதற்கு முக்கியக் காரணம் அதன் புவி அமைப்பு. ஐரோப்பியக் கண்டத்தின் இதயத்தில் இருக்கும் ஆஸ்திரியா, பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின் இரும்புத்திரைக்கு மிக அருகிலிருந்த நாடு. கிழக்கும் மேற்கும் புவி அரசியலால் இரண்டாகப் பிரிந்து கிடந்த போது… ஆஸ்திரியா மட்டும் நடுநிலையுடன் இரு பிரிவுகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க