தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - காய்ந்து கிடக்கும் அணைகள்... அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்... | Drought in Tamil nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - காய்ந்து கிடக்கும் அணைகள்... அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்...

கோடை காலத்தில், அதுவும் அக்னி நட்சத்திர நாள்களில் சமவெளிக் காடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மரம், செடி, கொடிகள், புல், பூண்டு காய்ந்து கருகிக்கிடக்கும். அந்த வறட்சியைப் பார்க்கும்போதே கண்களுக்குள் அனல் பறக்கும். மரக்கிளைகள் உராய்ந்து, எந்த நேரமும் தீப்பற்றத் துடிக்கும் காடு. அப்படிதான் இருக்கிறது இன்றைய தமிழகம்! குடிக்க தண்ணீர் இல்லை. தலைநகரம் சென்னை தொடங்கி குக்கிராமங்கள் வரை நிலைமை இதுதான். நிலத்தடி நீர் நிலவரம்... இன்னும் மோசம். அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது நிலத்தடி நீர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க