தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - மதுரை | Drought in Tamil nadu - Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - மதுரை

குப்பையில் நிறைந்த கிருதுமால்... சொட்டு நீரின்றி வறண்ட வைகை!

துரை மாநகரில், அதிகரித்துவரும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்றார்போல் குடிநீர் விநியோகம் இல்லை. தண்ணீர் வரியைக் கறாராக வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், மக்களுக்குத் தண்ணீர் வழங்குவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இரண்டு மணி நேரம் மட்டுமே வரும் தண்ணீரை அடிகுழாயில்தான் பிடிக்க முடியும். பத்து குடங்கள் தண்ணீர் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பாடு, படு திண்டாட்டம். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நோகாமல் மோட்டார் வைத்துத் தண்ணீரை உறிஞ்சிவிடுகிறார்கள். தண்ணீர் விடுகிற நாள்களில் வீட்டுக்குழாயிலும் தெருக்குழாயிலும் தண்ணீர் பிடிக்கப் பதறியடித்துக் கொண்டு பெண்கள் அலைவதைப் பார்த்தால், வேதனையாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க