தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - ஈரோடு | Drought in Tamil nadu - Erode - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - ஈரோடு

‘‘சாயத்தண்ணி குடிச்சி சாகவா முடியும்?’’

காவிரி, பவானி என இரு ஆறுகள் பாய்ந்தாலும், ஈரோட்டிலும் தண்ணீர்ப் பிரச்னை. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில், நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும், பல பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருவதால், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. மாநகராட்சிப் பகுதிக்காகத் தண்ணீர் எடுக்கப்படும் காவிரிப் படுகைப் பகுதிகளில் கழிவுநீர் கலப்பதுதான் இதற்குக் காரணம். பவானி ஆற்றின் கரையோரங்களில் அமைந்திருக்கும் தோல் ஆலைகள் மற்றும் சாய ஆலைகள் வெளியிடும் கழிவுநீரால் மாசடைந்துகிடக்கிறது, பவானி ஆறு. இதனால், ‘‘சாயத்தண்ணி குடிச்சி சாகவா முடியும்?’’ என்று ஆத்திரம் பொங்க அங்கலாய்க்கிறார்கள் மக்கள்.

அதிகம் படித்தவை