தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - காஞ்சிபுரம் | Drought in Tamil nadu - Kanchipuram - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - காஞ்சிபுரம்

கொடிகட்டிப் பறக்கும் தண்ணீர் வியாபாரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொய்த்துப்போன பருவமழை, பெருகிவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களின் படையெடுப்புகள் எனப் பல காரணங்களால் நாளுக்கு நாள் தண்ணீரின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால், தண்ணீர் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பருவமழை பொய்த்துப்போனதால், மாவட்டத்தின் பெரிய ஏரிகளான தாமல், தென்னேரி, கொண்டங்கி, உத்திரமேரூர், பொன்விளைந்த களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், மணிமங்கலம் ஆகிய ஏரிகள் வறண்டுகிடக்கின்றன. போதாக்குறைக்கு, பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையால் நீர் உறிஞ்சப்படுவது தடைப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அதிகம் படித்தவை