தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - திருச்சி - எரியும் வீட்டில் பிடுங்கும் அதிகாரிகள்! | Drought in Tamil Nadu - Trichy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - திருச்சி - எரியும் வீட்டில் பிடுங்கும் அதிகாரிகள்!

காவிரி பாய்ந்தோடும் ஊர் என்றுதான் திருச்சிக்குப் பெயர். காவிரிப் படுகை காய்ந்துகிடக்கிறது. காவிரி - கொள்ளிடம் ஆறுகளில் ராட்சத ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, 40-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. முத்தரசநல்லூரிலிருந்து, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்குள் எட்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மூலம், திருச்சி மட்டுமல்லாமல் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பத்து மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

அதிகம் படித்தவை