தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - நாகப்பட்டினம் | Drought in Tamil nadu - Nagapattinam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - நாகப்பட்டினம்

கதறும் கடலோரக் கிராமங்கள்! - இறால் பண்ணைகளால் உப்புக்கரிக்கும் நீர்...

‘கண்ணுக்கெட்டுன தொலைவுக்கு கடல் இருந்தாலும், உப்புத் தண்ணியவா மொண்டு குடிக்க முடியும்...’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள். இங்குள்ள கடலோரக் கிராமங்களில் நிலவும் குடிநீர்ப் பஞ்சத்தை, வார்த்தைகளால் வடிக்க இயலாது. சீர்காழி, தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, நாயக்கர் குப்பம், வாணகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 26 மீனவக் கிராமங்களுக்கு, போர்வெல் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் செயல்பட்டுவரும் இறால் பண்ணைகளால், நிலத்தடி நீரும் உப்புநீராக மாறிவிட்டது. இதனால், இங்கெல்லாம் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

அதிகம் படித்தவை