தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - திருவள்ளூர் | Drought in Tamil Nadu - Tiruvallur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - திருவள்ளூர்

கடந்தாண்டு 3,222 மில்லியன் கன அடி தண்ணீர்... இப்போது 278 மில்லியன் கன அடி மட்டுமே!

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு, மேய்ச்சல் நிலம்போலக் காட்சி அளிக்கின்றன. தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம். பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள்தான் சென்னை நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவை. 3,234 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 158 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 63 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் ஒன்பது மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு நான்கு ஏரிகளிலும் மொத்தம் 3,222 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது; தற்போது வெறும் 278 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.