தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - ராமநாதபுரம் | Drought in Tamil Nadu - Ramanathapuram - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - ராமநாதபுரம்

விடிய விடிய காத்திருப்பு... காற்று வாங்க அல்ல... ஊற்று நீரை வாங்க!

நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்ட மாவட்டம் ராமநாதபுரம். தமிழகத்திலேயே தண்ணீர் குறைவான அளவில் இருக்கும் பகுதியும்கூட. காவிரி பாயும் மாவட்டங்களே தண்ணீருக்குத் தவிக்கும்போது, ராமநாதபுரத்தின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘தண்ணியில்லாக் காடு’ என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்துக்கு, காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாதது, போதிய மழை இல்லாதது ஆகிய காரணங்களால் மீண்டும் பழைய நிலை உருவாகியுள்ளது.

அதிகம் படித்தவை