தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - கரூர் | Drought in Tamil nadu - Karur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - கரூர்

“ஊருக்கெல்லாம் தண்ணீர் தர்றோம்... எங்க ஊருக்குத் தண்ணீரில்லை!”

ரூர், காவிரி ஆற்றின் கரையில் ராட்சத ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்துவருகிறார்கள். இப்படி ஊருக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும் கரூர் மாவட்டத்தில், குடிக்கத் தண்ணீர் போதாமல் தவிக்கிறார்கள் மக்கள். கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், தான்தோன்றிமலை ஆகிய ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீரின்றி அல்லாடி வருகிறார்கள்.

அதிகம் படித்தவை