தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - தூத்துக்குடி - சிவகங்கை | Drought in Tamil nadu - Thoothukudi and Sivagangai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - தூத்துக்குடி - சிவகங்கை

தூத்துக்குடி - உயிர் பலி வாங்கும் ஊற்றுக் குழிகள்!

தூ
த்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை விளாத்திகுளம் தாலுகா மிகவும் பின்தங்கியப் பகுதி. இங்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பத்து நாள்களுக்கு ஒருமுறை கிடைத்துவந்த தண்ணீர், தற்போது மேலும் தாமதமாகிறது. பல கிராமங்களில் கண்மாய்களும் ஊருணிகளும் நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வருகின்றன. அதிலிருக்கும் கலங்கலான தண்ணீரை எடுத்து வடிகட்டி, தெளிய வைத்துக் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள் மக்கள். ஆடு, மாடுகளுக்கும் அதே தண்ணீர்தான்.

இன்னொரு பக்கம் வைப்பாற்றுப் படுகையில் எட்டு அடி ஆழம்வரை ஊற்று தோண்டி, அதில் ஊறும் தண்ணீரை அகப்பை மூலம் சேகரிக்கின்றனர். இப்படி ஒரு குடம் தண்ணீர் சேகரிக்க சுமார் அரை மணி நேரத்துக்கும் அதிகமாகிறது. கொளுத்தும் வெயிலிலும் பெண்கள் நீண்டநேரம் காத்திருந்து குடத்தில் தண்ணீர் சுமக்கிறார்கள். இங்கே தண்ணீர் பிரச்னை வேறு சில ஆபத்துகளையும் உருவாக்கியிருக்கிறது. ஊற்றுக்காகத் தோண்டப்பட்ட குழிகள்  ஆங்காங்கே புதைகுழிகள்போல மாறிவிட்டன. ஆற்றில் விளையாடச் செல்லும் சிறுவர்கள், இந்தக் குழிகளில் சிக்கி உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

- இ.கார்த்திகேயன், படம் : ப.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

அதிகம் படித்தவை