மாதம் ஒருமுறை வயநாடு விசிட்! - ராகுல் திட்டம்... மக்கள் உற்சாகம்! | Rahul Gandhi visit in Wayanad - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

மாதம் ஒருமுறை வயநாடு விசிட்! - ராகுல் திட்டம்... மக்கள் உற்சாகம்!

மேதி, வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பிரதமர் கனவுடன் வலம்வந்த ராகுல் காந்தியின் கனவு தகர்ந்துவிட்டது. ஆஸ்தான தொகுதியான அமேதியில் தோல்வி, ஒட்டுமொத்தமாக காங்கிரஸின் படுதோல்வி, பி.ஜே.பி-யின் அபார வெற்றி போன்ற காரணங்களால், காங்கிரஸ் தலைவர் பதவி யிலிருந்தே விலக முடிவெடுத்தார் ராகுல் காந்தி. இந்தத் தேர்தலில், ராகுலுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், வயநாடு தொகுதி வெற்றி. இந்தச் சூழலில்தான் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு தொகுதிக்கு வந்திருந்தார் ராகுல் காந்தி.

மூன்று நாள்கள் பயணம். வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்தார் ராகுல். மக்களிடம் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு முன்பிருந்த அதே உற்சாகத்தில், சற்றும் குறைவு இல்லாமல் ராகுலை வரவேற்றார்கள். கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதுவும் வயநாடு மக்களைப் பாதிக்கவில்லை. திருவிழாபோல அவரது வருகையைக் கொண்டாடினார்கள் மக்கள். பலரும், ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’, ‘தேசத்துக்கு நீங்கள் தேவை ராகுல்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.