“பொழுதுபோக்குக்காக அரசியலுக்கு வரவில்லை கமல்!” | Makkal Needhi Maiam Vice President Dr.Mahendran interview | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

“பொழுதுபோக்குக்காக அரசியலுக்கு வரவில்லை கமல்!”

மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் பளீர்

“பதினான்கு மாதங்களே ஆன இந்தக் குழந்தையை மக்கள் வாரியணைத்து, நடக்கவும் ஓடவும் விடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எங்களுக்குக் கரிசனம் காட்டியிருக்கிறார்கள் மக்கள்” – நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நெகிழ்ச்சியுடன் இப்படிச் சொன்னார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். இந்தக் கட்சி முதல் தேர்தலிலேயே தனித்து களம்கண்டு, பல தொகுதிகளில் மூன்றாம் இடம், நான்காம் இடங்களைப் பிடித்துள்ளது. சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன். கோவை தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகளைப் பெற்ற, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மருத்துவர் மகேந்திரனிடம் பேசினோம்.

“நாடாளுமன்றத் தேர்தலில், பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றீர்கள். வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டீர்களா?”

“இதே கேள்வியை கடந்த ஜனவரியில் எங்களிடம் பலர் கேட்டார்கள். நாங்கள் எந்த அளவுக்குத் தயாராக இருந்தோம் என்பதை, தேர்தல் முடிவுகளில் பார்த்தீர்கள். இப்போது நாங்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறோம். அந்தத் தேர்தல் முடிவுகளிலும் இது எதிரொலிக்கும்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க