மக்களை ஈர்க்கும் தலைமை அ.தி.மு.க-வில் இல்லை! - பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா | ADMK Senior Leader Rajan Chellappa interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

மக்களை ஈர்க்கும் தலைமை அ.தி.மு.க-வில் இல்லை! - பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா

.தி.மு.க-வில் அதிகாரச் சண்டை உச்சத்துக்கு வந்திருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் துணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக... ‘அன்பாக’ அறிக்கை வெளியிட்டாலும்கூட உள்ளுக்குள் ஏராளமான பிரச்னைகள்... எந்நேரமும் பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்தே குடைச்சல் கொடுத்து வருபவர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா. அவ்வப்போது தலைமைக்கு எதிரான கருத்துகளைச் சொல்வது, தனக்கு வேண்டியவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டும் எனச் சண்டை போடுவது எனத் தலைமைக்குத் தொடர்ந்து தலைவலி கொடுப்பவர் இவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகன் ராஜ் சத்யனுக்கு இப்படி சண்டை போட்டுத்தான் வேட்பாளர் சீட்டே பெற்றுத் தந்தார்.

இந்த நிலையில்தான், “இரட்டைத் தலைமையாக இருப்பதால் யார் பேச்சைக் கேட்பது, யாருக்கு அதிகாரம் உள்ளது என்று நிர்வாகிகள், தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாபோல அனைவரையும் ஈர்த்து வழிநடத்திச் செல்லக்கூடிய வலிமை படைத்தவர்தான், தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டும். அதிகாரம் படைத்த ஒரே தலைமை வேண்டும்” என்று அ.தி.மு.க-வில் நெருப்பைப் பற்றவைத்திருக்கிறார் ராஜன் செல்லப்பா. அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க