ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

ஆஹான்

araathu
டப்பாடி சில விஷயங்களை வியக்கத்தக்க வண்ணம் செய்துவிடுகிறார். அமெரிக்கா, ஐரோப்பாவைக்கூட விட்டுவிடுங்கள். பக்கத்தில் இருக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் போன்ற நாடுகளில்கூட 24 மணி நேரமும் கடைகள் திறந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரவு 11 மணிக்கு மேல் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றால்கூட அலைய வேண்டியிருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் துணிச்சலாக எடுக்காத இந்த முடிவை எடப்பாடி எடுத்ததற்குப் பாராட்டலாம். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கெல்லாம் இப்படி ஒரு விஷயம் இருப்பது... இப்படி ஒரு பிரச்னை இருப்பதுகூட தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். அவர்கள் உலகமே வேறு... அது ஒரு குட்டி உலகம். முதல்வர் என்பவர் அவ்வப்போதாவது மக்களுடன் கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் இப்படி துணிச்சலான முடிவுகளை எடுக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க