ஒரு கிட்னி மூன்று கோடி ரூபாய்! - இது ஃபேஸ்புக் மோசடி! | Kidney Donor Facebook scam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)

ஒரு கிட்னி மூன்று கோடி ரூபாய்! - இது ஃபேஸ்புக் மோசடி!

ஓவியம்: அரஸ்

முதலீட்டுக்கு அதிக வட்டி, மல்டி லெவல் மார்க்கெட்டிங், பச்சைக்கல், ஈமு கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, கொப்பரை விற்பனை, சந்தன மர வளர்ப்பு, அகர் மர வளர்ப்பு... என்று ஈரோடு மாவட்டத்தைக் குறிவைத்துப் பல மோசடிகள் அரங்கேறியுள்ளன. லேட்டஸ்டாக அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது, சிறுநீரக தான மோசடி! ஈரோட்டில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையின் பெயரைப் பயன்படுத்தி… ‘கிட்னி தானம் செய்தால், மூன்று கோடி ரூபாய் தரப்படும்’ என்று விளம்பரம்செய்து, பதிவுக் கட்டணமாக லட்சக்கணக்கான ரூபாயைச் சுருட்டியிருக்கிறது ஒரு கும்பல்.