எளிய மக்களிடமிருந்து கல்வியைப் பறிக்கலாமா? - கொந்தளிக்கும் கல்வியாளர்கள் | Discuss about 5th and 8th standard Public Exam - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

எளிய மக்களிடமிருந்து கல்வியைப் பறிக்கலாமா? - கொந்தளிக்கும் கல்வியாளர்கள்

மார்ச் மாதத் தேர்வு ஜுரம் தொடங்குவதற்கு முன்பாகவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது, தமிழகக் கல்வித்துறை. 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் 2018-19 கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகக் கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையே, அந்தப் பீதிக்குக் காரணம். அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த ஆண்டு இதைச் செயல்படுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

‘இந்தியக் கல்வித் திட்டத்தின் தேர்வுமுறைகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்குகின்றன’ என்று ஏற்கெனவே கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ‘மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கை எல்லா மட்டங்களிலும் ஒலித்துவருகிறது. இந்நிலையில், ‘கல்வித் துறையில் தமிழ்நாடு பத்து அடிகள் பின்னோக்கி இறங்கும் வகையிலான இந்த நடைமுறையைச் செயல்படுத்தும் முடிவை, மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து தமிழக அரசு எடுத்துள்ளது’ என்று குற்றம்சாட்டப்படுகிறது. அரசின் இந்த முடிவு, முதல் தலைமுறையாகப் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் எளிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல் என்று கல்வியாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close