மிஸ்டர் கழுகு: “கனிமொழி சீட் உங்களுக்கு!” - கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

மிஸ்டர் கழுகு: “கனிமொழி சீட் உங்களுக்கு!” - கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி

“பங்குனி தொடங்கும் முன்னரே அனல்வீச ஆரம்பித்துவிட்டதே” என்றபடிச் சிறகுகளை விசிறிக்கொண்டே வந்தார் கழுகார். “தேர்தல் அனல் அதைவிட அதிகம் இல்லையா...” என்றபடிக் கரும்பு ஜூஸை பருகக் கொடுத்துவிட்டு, நேராக செய்திக்குள் புகுந்தோம்.

“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டிவிட்டன போலவே?”

“பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும்  துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அச்சில் ஏறும்வரை விஜயகாந்த் தரப்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.”

“எல்லாம் சரி, தே.மு.தி.க-வின் நிலைப்பாடு என்னதானாம்?”

“ ‘மதில் மேல் பூனை’ நிலை என்கிறார்கள். விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையாம். பிரேமலதா, விஜய் பிரபாகரன், சுதீஷ் இந்த மூவருக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படாதவரை, கூட்டணி குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இல்லை. ஆனால், விஜயகாந்த் - ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு, ‘விஜயகாந்த் விரைவில் அறிவாலயம் பக்கம் தாவலாம்’ என்கிற பேச்சுகள் வேகம் எடுத்துள்ளன.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close