ஐந்து கோடி நிச்சயம்... அமைச்சர் பதவி சத்தியம்! - புதுச்சேரியில் காங்கிரஸ் கலக்கம் | Puducherry current politics status - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

ஐந்து கோடி நிச்சயம்... அமைச்சர் பதவி சத்தியம்! - புதுச்சேரியில் காங்கிரஸ் கலக்கம்

“காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிபெறுவதுகூட பிரச்னை இல்லை போலிருக்கிறது. வெற்றி பெறும்  எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பதுதான், அந்தக் கட்சிக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. “கர்நாடகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் எங்கள் எம்.எல்.ஏ-க்களை வளைப்பதற்கு பி.ஜே.பி கூட்டணியில் உள்ள கட்சிகள் பேரம் பேசுகின்றன” என்று கதறுகிறது புதுச்சேரி காங்கிரஸ் கட்சி.

தி.மு.க ஆதரவுடன், முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி நடத்திவருகிறது காங்கிரஸ். பிப்ரவரி 20-ம் தேதி இரவு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோருடன் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் இருவரும், ‘என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே.ஜெயபால்,  அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான வையாபுரி மணிகண்டன் இருவரும் எங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அணிமாறச் சொல்லி பேரம் பேசுகிறார்கள்” என்று சபாநாயகரிடம் புகார் அளித்துப் பரபரப்பைப் பற்றவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close