“எம்.பி பதவி என் நீண்டகால லட்சியம்!” - கன்னியாகுமரியைக் குறிவைக்கும் ஹெச்.வசந்தகுமார் | Congress Party H.Vasanthakumar interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

“எம்.பி பதவி என் நீண்டகால லட்சியம்!” - கன்னியாகுமரியைக் குறிவைக்கும் ஹெச்.வசந்தகுமார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்குப் பத்துத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்தத் தொகுதி, எந்தக் கட்சிக்கு என்பதெல்லாம் முடிவுசெய்யப்படாத நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளர்போலவே வலம்வர ஆரம்பித்துவிட்டார், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார். இவர், இப்போது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்துவருகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து வேலைவாய்ப்பு முகாம், கபடிப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நோக்கத்துடன்தான் இங்கு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திவருகிறீர்களா?”

“ஆம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு மக்களிடம் சென்று வாக்குக் கேட்பதைவிட, ‘நான் இதெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். இன்னும் செய்வேன். நீங்கள் எனக்கு ஆதரவு தாருங்கள்’ என்று கேட்பதற்காக நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.”

[X] Close

[X] Close