“குருவின் சாவுக்கு காரணமானவர்களுடன் கூட்டணியா?” | Congress Vishnuprasath Scolding PMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

“குருவின் சாவுக்கு காரணமானவர்களுடன் கூட்டணியா?”

பா.ம.க-வை விளாசும் அன்புமணியின் மைத்துனர்

“காடுவெட்டி குருவைக் கைதுசெய்து சிறையில் அடைத்து, அவரின் சாவுக்குக் காரணமான கட்சியுடன் பா.ம.க கூட்டணி வைத்ததை, குருவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது” என்று விளாசுகிறார், அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு, கட்சி நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், செயல் தலைவர்கள் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

தலைவர்கள் மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் கூட்டம் என்பதால், திருச்சி மட்டுமல்லாமல் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கே.எஸ்.அழகிரி டெல்லியில் இருந்ததால், அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்தில் பேசிய வசந்தகுமார், திருச்சி வேலுச்சாமி ஆகியோரின் பேச்சுகளில் அனல் பறந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close