களமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை? | Karur Political status - Vijayabaskar's Father wish to contest Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

களமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை?

மிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, கரூர் நாடாளுமன்றத்  தொகுதியில் சீட் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கும் விவகாரம் கரூர் அரசியல் வட்டாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. தங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே, தம்பிதுரையின் தொகுதியான கரூரில் சின்னதம்பியை சீட் கேட்டுப் பணம் கட்டுமாறு அ.தி.மு.க தலைமை மூலமாக பி.ஜே.பி வலியுறுத்தியது என்ற தகவல் கரூரில் பரபரக்கிறது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசினர். “புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஒன்றியத்தில் உள்ள ராப்பூசல்தான் சின்னத்தம்பிக்கு பூர்வீகம். ஆரம்பத்தில், செயற்கை வைரம் தயாரிக்கிற கல்பட்டறை கூலித்தொழிலாளியாக இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த மாற்றுச்சமூக பெண்ணை காதலித்துத் திருமணம் செய்தார். அதனால், இவரின் சமூகத்தினர் இவரை ஊரைவிட்டுத் தள்ளிவைத்தனர். இதனால், இலுப்பூரில் வீடு கட்டிக் குடியேறினார். எம்.ஜி.ஆர் காலத்தில், அரசியலில் நுழைந்த சின்னத்தம்பி, படிப்படியாக அரசியலில் வளர்ச்சிபெற்றார். இவருக்கு விஜயபாஸ்கர் உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு, திலிப்பட்டி அருகே பத்து ஏக்கரில் தோட்டம் இருக்கிறது. அங்கே தினமும் விசிட் அடிப்பது இவரது வழக்கம். இப்போது, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவராக இருக்கிறார்.

[X] Close

[X] Close