தைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம் | C.V.Shanmugam compromise with PMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

தைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம்

அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட்டு கணிசமான தொகுதிகளைப் பெற்றதைவிட, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் தங்களுக்குமான 13 ஆண்டுப் பகை, முடிவை எட்டியதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது பா.ம.க.

2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் சி.வி.சண்முகமும், பா.ம.க சார்பில் கருணாநிதி என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால், சி.வி.சண்முகத்தின் வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. இதில் சி.வி.சண்முகம் காரின் கீழ் படுத்துத் தப்பிவிட, அவரின் மைத்துனர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். ‘என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டது ராமதாஸும், அன்புமணியும்தான்’ என்று நேரடியாகவே குற்றம்சாட்டினார், சி.வி.சண்முகம். சி.பி.ஐ வரை சென்ற அந்த வழக்கிலிருந்து ராமதாஸ் மற்றும் அன்புமணி பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது, அந்த வழக்கு.

“அதிமுக – பா.ம.க கூட்டணி குறித்த பேச்சு எழுந்ததுமே எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் முதலில் பேசியது சி.வி.சண்முகத்திடம்தான். ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர், பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதால் விட்டுக்கொடுத்தார் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close