முகிலனுக்கு என்ன ஆனது? - தலைமறைவானாரா? காவல் துறை கடத்தியதா? | Activist Mugilan missing issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

முகிலனுக்கு என்ன ஆனது? - தலைமறைவானாரா? காவல் துறை கடத்தியதா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான தீவைப்புச் சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களுடன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதை வெளியிட்ட மறுநாளிலிருந்து அவர் மர்மமான முறையில் மாயமானார். அவர் போலீஸாரால் கடத்தப்பட்டார் என்று முகிலன் தரப்பினரும், தனிப்பட்ட காரணங்களால் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸ் தரப்பிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து, முகிலனைக் கண்டுபிடிக்கக்கோரி மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜராகியுள்ளார்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். “முகிலனைக் கண்டுபிடிக்க எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறோம். காஞ்சிபுரம் மற்றும் ஒலக்கூர் காவல் நிலையங்களிலும் புகார் செய்து சி.எஸ்.ஆர்  பெற்றுள்ளோம்.

போலீஸைப் பொறுத்தவரை, அவரது அலைபேசி எண், காஞ்சிபுரம்வரைதான் தொடர்பில் இருந்ததாகக் கூறுகிறார்கள். எங்கள் வாக்குமூலத்தில் ஒலக்கூர்வரை அவர் அலைபேசி எண் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளோம் . அவர் ரயிலில் பயணிக்காதது தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு எழும்பூர் ரயில்வே போலீஸிலிருந்து எழும்பூர் F-2 காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், திருவல்லிக்கேணி துணை ஆணையரையும் F-2 காவல் நிலையத்துடன் இணைந்து, ‘சூ-மோட்டோ’வாக எடுத்து இந்த வழக்கை விசாரித்து மார்ச் 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று  நீதிபதிகள் கூறியுள்ளனர்” என்றார்.

[X] Close

[X] Close