“ஊராட்சி பதவிகளும் சலுகைகளும் பறிபோகும்” | People opposition for their Villages merge with Nagarcoil Corporation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

“ஊராட்சி பதவிகளும் சலுகைகளும் பறிபோகும்”

மாநகராட்சியுடன் இணைக்க மீனவக் கிராமங்கள் எதிர்ப்பு

கராட்சியாக அறிவிக்கப்பட்ட 100-வது ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது நாகர்கோவில். இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், மீனவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்படுவதுடன், வரி இனங்களும் உயரும் என்று தங்கள் கிராம ஊராட்சிகளை நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், கிராம மக்கள்.

1920-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நகராட்சியாக மாற்றப்பட்ட நாகர்கோவிலை, கடந்த 13-ம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. கடலோர மீனவக் கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடிவரும் கன்னியாகுமரி மாவட்ட சி.ஐ.டி.யு மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.அந்தோணி, இதுகுறித்து நம்மிடம் பேசினார்.

“நாகர்கோவிலில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைத் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகியும், நகரத்தின் பாதி வார்டுகளில்கூட இன்னும் பணிகளை முடிக்கவில்லை. குண்டும்குழியுமான சாலைகள், 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்று அவலங்கள் தொடர்கின்றன. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம், கரியமாணிக்கபுரம் பஞ்சாயத்துகளை நாகர்கோவில் நகராட்சியில் இணைத்தார்கள். ஆனால், இன்றுவரை அந்தப் பகுதிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

[X] Close

[X] Close