நடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்... - புலம்பும் விவசாயிகள்! | Vijay Makkal Iyakkam Tiruvannamalai leader Kickback from Farmers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

நடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்... - புலம்பும் விவசாயிகள்!

டைபாதைக் கடைகள், சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் போன்றவற்றில் காவல்துறையினரும், ஏரியா ரவுடிகளும் மாமூல் வாங்குவது குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். சமீபத்தில், சென்னையில் சாலையோரத்தில் கடை நடத்திய இளைஞர் ஒருவர் மாமூல் கொடுக்க மறுத்ததால், அவரது தள்ளுவண்டியைக் காவல்துறையினரே அடித்து உடைத்த சம்பவத்தையும் மறந்திருக்கமாட்டோம். மாமூல் மிரட்டல்கள் சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமல்ல... உழவர் சந்தையில் கடைபோடும் விவசாயிகளுக்கும் இருக்கிறது.

திருவண்ணாமலை, தியாகி அண்ணாமலை நகர்ப் பகுதியில் உள்ளது அரசு உழவர் சந்தை. 1999-ல் தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தை வளாகத்தில் 107 கடைகள் உள்ளன. தினமும் ஐந்து லட்ச ரூபாய் அளவுக்கு, காய்கறி வியாபாரம் நடக்கிறது. 64 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இங்கு கடைபோடுகிறார்கள். அந்த விவசாயிகள்தான், ‘விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பாரதிதாசன், மாமூல் கேட்டு எங்களை மிரட்டுகிறார்’ எனப் புகார் வாசிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க