ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகின? | HIV-Infected Blood Given to Pregnant Woman - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகின?

கேள்வி எழுப்பும் உறவினர்கள்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மருத்துவ சிகிச்சையைத் தாண்டி, வேறு எந்த உதவியும் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள், அந்தப் பெண்ணின் உறவினர்கள்.

கடந்த டிசம்பர் மாதம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, தமிழகத்தையே அதிரவைத்தது. அமைச்சர்கள், சுகாதாரத்துறைச் செயலாளர் என அனைவரும் அலறியடித்துக் கொண்டு சாத்தூருக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கடந்த மாதம் 17-ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இன்னமும் தாயும், சேயும் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்துவருகிறார்கள்.

எதிர் காலத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அமைச்சர்களும், அதிகாரிகளும் உறுதியளித்தனர். ரத்த வங்கியில் அலட்சியமாகச் செயல்பட்ட மூன்று தற்காலிக ஊழியர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், இதற்குப் பொறுப்பு வகிக்கும் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close