ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)

ஆஹான்

amuduarattai
ஆட்சியைத் தக்கவைக்கத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி - அன்வர் ராஜா.

நீங்க பேசுவதைப் பார்த்தால் இந்த முறை உங்களுக்கு சீட்டு கிடைக்காது போல.!?

ajmalnks
ஊழல் அமைச்சர்கள்ன்னு லிஸ்ட் போட்டு கவர்னர்கிட்ட கொடுத்தீங்களே... இப்போ அவங்ககூடவே கூட்டணியா?

அது போன வருஷம். இது இந்த வருஷம்.

shivaas_twitz
இவங்களுக்கு எல்லாம் கட்சி ஆபீஸ் இல்லையா? ஏன் ஹோட்டல்ல பேசுறாங்க?!

RahimGazzali
முன்பெல்லாம் ஒரு தலைவர் கூட்டணி மாறினால், எப்படி எல்லாம் பேசினார் என்று அவரின் முந்தைய பேச்சை மேற்கோள் காட்டுவார்கள். இப்போது அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டுகிறார்கள்.

Kozhiyaar
‘மாற்றமும் முன்னேற்றமும்’ தனக்கு மட்டுமே என்பதே பலரின் நிலை!

SkSoundhar
யாராலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது. - தம்பிதுரை.

அதைதான் ஆர்.கே.நகரில் பார்த்தோமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close