யுத்தமும் ரத்தமும் வேண்டாம்... சமாதானக் கதவு திறக்கட்டும்! | Indian - Pakistan issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

யுத்தமும் ரத்தமும் வேண்டாம்... சமாதானக் கதவு திறக்கட்டும்!

லகின் கொந்தளிப்பான எல்லைக்கோடுகளில் ஒன்று மீண்டும் ஒருமுறை பதற்றத்தில் பற்றி எரிகிறது. இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தேசப் பிரிவினை தொடங்கி கார்கில்வரை நான்கு யுத்தங்கள் நடத்தியும், ஒரு பிரச்னைக்குக்கூடத் தீர்வுகாண முடியவில்லை. அதுவே நிரந்தர உண்மையும்கூட. யுத்தங்களால் ஒருபோதும் தீர்வுகள் கிடைக்காது. இப்போது மறுபடியும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன போர் மேகங்கள். போரைத் தீர்மானிக்கும் இருவேறு சக்திகளாக மோடியும் இம்ரான்கானும் எதிரெதிர் துருவங்களில் நிற்கிறார்கள். இரு நாடுகளிலும் வாழும் 155 கோடி மக்களின் எதிர்காலம் இவர்கள் இருவரின் கைகளில் சிக்கியிருக்கிறது! 

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிதீர்க்கும் தாக்குதலை 12 நாள்களில் தொடுத்தது இந்தியா. ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்-2’ என்று வர்ணிக்கப்படும் இதை மேற்கொண்டது இந்திய விமானப் படை. பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை இந்திய விமானப் படை ஒருங்கிணைந்து நிகழ்த்திய இந்தத் தாக்குதல் பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

[X] Close

[X] Close