ஜெ. படத் திறப்பு விழாவுக்கு செலவு எவ்வளவு... தொகையைச் சொல்ல மறுத்த அரசுத் துறைகள்! | Expenditures of Jayalalitha Photo Opening Ceremony in TN Assembly - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

ஜெ. படத் திறப்பு விழாவுக்கு செலவு எவ்வளவு... தொகையைச் சொல்ல மறுத்த அரசுத் துறைகள்!

புலனாய்வு செய்த ஜூ.வி.

ரசுத் துறையில் ஏதேனும் ஓர் அலுவலகத்தின் அறையில் வெறுமனே கிடக்கும் ஒரு செங்கல்லை எடுத்து, ஓர் அடி தூரம் தள்ளிவைக்க வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு பில் போட்டுச் செலவு எழுதி விடுவார்கள். மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி - 24) முன்னிட்டு தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைக் கடந்த ஆண்டு திறந்தார்கள். அந்தத் திறப்பு விழாவுக்கான செலவு விவரங்கள், ஜூனியர் விகடனுக்குப்  பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றன.

“ஜெயலலிதா படத்தைத் திறந்து வைப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை குறித்த தகவல்களைத் தர வேண்டும்” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைச் செயலகம், பொதுப்பணித்துறை, செய்திப்பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல்கள் கேட்டோம். நாம் கேட்ட எந்தத் தகவல்களுக்கும், சட்டப்பேரவைச் செயலகமோ, அரசுத் துறைகளோ உரிய முறையில் பதில்கள் அளிக்கவில்லை. ‘செலவினங்களுக்கான பட்டியல் இதுவரை தீர்வு செய்யப்படவில்லை’ என்ற மழுப்பலானப் பதில்களைத்தான் நமக்குச் சொன்னார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close