“கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே!” - உடற்கூறாய்வு அறிக்கைகள் சொல்லும் உண்மை | Thoothukudi massacres postmortem report revealed - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

“கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே!” - உடற்கூறாய்வு அறிக்கைகள் சொல்லும் உண்மை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 2018, மே 22-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், இறந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கைகள் இப்போது வெளியாகியுள்ளன. பலர் தலையில் தோட்டாக்கள் பாய்ந்து இறந்துள்ளனர். பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதிபட்டும், தலையில் லத்தியால் தாக்கப்பட்டும் சிலர் இறந்திருக்கிறார்கள்.

தாங்கள் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் நீரிலும் ஆலையின் கழிவுகள் கலப்பதால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறோம் என்று புகார் எழுப்பிவந்த மக்கள்தான், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்றது, காவல்துறை. அந்தக் கலவரமே, காவல்துறையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் என்று குற்றம்சாட்டும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், அதற்கான சான்றுகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், இறந்தவர்கள் அனைவரின் உடற்கூறாய்வு அறிக்கைகளும், நமக்குக் கிடைத்தன. இந்த உடற்கூறாய்வு அறிக்கைகளைப் பார்த்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ‘கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே துப்பாக்கிச்சூட்டை போலீஸ் நடத்தியுள்ளது’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.

[X] Close

[X] Close