கடவுளின் தேசத்தில் மூழ்கும் சொர்க்கம்! - புவி வெப்பமடைவதால் புதையும் தீவு | Munroe Island will Catastrophe for Global warming - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

கடவுளின் தேசத்தில் மூழ்கும் சொர்க்கம்! - புவி வெப்பமடைவதால் புதையும் தீவு

டவுளின் தேசமாம் கேரளத்தில் அமைந்துள்ள ‘மன்றோ துருத்து’ தீவில், கொட்டிக்கிடக்கிறது இயற்கைப் பேரழகு. எங்கு நோக்கிலும் தென்னை மரங்களின் பசுமைப் படர்ந்திருக்கிறது. ஆறுகளும் ஏரிகளும் சூழ்ந்திருக்க, எல்லா இடங்களுக்கும் படகு பயணம்தான். மோட்டார் படகுகளைக் காட்டிலும், நீண்ட மூங்கில் கம்புகளைக் கொண்டு இயக்கப்படும் வள்ளங்களில் பயணிக்கும் அனுபவம் அலாதியானது. இங்கு, காயல் மற்றும் குளங்களில் இருந்து மீன்களைப் பிடித்து மொறுமொறுவென வறுத்து வீட்டு ஹோட்டல்களில் பரிமாறப்படும் பதார்த்தத்தின் ருசிக்கு இணையேதும் இல்லை.

இவ்வளவு எழில்மிகுந்த தீவுக்கு பேராபத்து ஒன்று சூழ்ந்துள்ளது. புவி வெப்பமடைவதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தீவு மூழ்கிவருகிறது; அதனால் அங்கிருந்து பல குடும்பங்கள் வீடுகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்கின்றன என்று தகவல்கள் வர, மன்றோ துருத்துவுக்குப் புறப்பட்டோம்.  

[X] Close

[X] Close