தாது மணல் விவகாரம்... தனியாருக்குத் தடை! - மத்திய அரசு அதிரடி | illegal sand mining banned by the Union Ministry of mines - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

தாது மணல் விவகாரம்... தனியாருக்குத் தடை! - மத்திய அரசு அதிரடி

ஃபாலோ அப்

ருபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத் தென்மாவட்ட கடற்கரைகளில் நடந்துவந்த தனியாரின் தாதுமணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, மத்தியச் சுரங்க அமைச்சகம். இதுதொடர்பாக, தொடர்ச்சியாகக் கட்டுரைகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுவந்த நிலையில், இப்படி ஓர் அறிவிப்பாணை வந்திருக்கிறது. சரி, என்ன நடந்தது, விரிவாகப் பார்ப்போம்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாதுமணல் கொள்ளை நடந்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் கொள்ளை குறித்து, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், தமிழக அரசு உயர் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, சத்யபிரதா சாஹு ஆகியோரின் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற அறிவுரையாளராக நியமிக்கப்பட்ட வீ.சுரேஷ் என்ற வழக்கறிஞரின் விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் மூலம், தாதுமணல் விவகாரத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 233-ஐ தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான ‘மோனசைட்’ (மோனசைட் டெய்லிங்க்ஸ்) என்னும் கனிமம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது என்ற யூகம், கிட்டத்தட்ட உண்மையாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விவகாரங்கள் குறித்தும், தாது மணல் கொள்ளை குறித்தும், ‘தாதுமணல் கடத்தல்... அணு ஆயுத ஆபத்து! - அதிரவைக்கும்  ஆவணங்கள்’ என்ற தலைப்பில் 4.07.2018 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழிலிருந்து தொடர்ச்சியாக நான்கு இதழ்களில் விரிவாக எழுதியிருந்தோம். இந்த நிலையில்தான்,  20.02.2019 தேதியன்று ‘தாதுமணல் கனிமங்களை இனி தனியார் நிறுவனங்கள் அள்ளக் கூடாது’ என்று அரசிதழிலில் அறிவிப்பாணை (எண்.118) வெளியிட்டுள்ளது மத்தியச் சுரங்க அமைச்சகம்.

[X] Close

[X] Close