மிஸ்டர் கழுகு: போர்ச்சூழல்... தள்ளிப்போகுமா தேர்தல்? | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

மிஸ்டர் கழுகு: போர்ச்சூழல்... தள்ளிப்போகுமா தேர்தல்?

வெயிலில் வியர்த்துவந்த கழுகாருக்கு, ‘சில்’லென்று இளநீரைக் கொடுத்துவிட்டு, ‘‘போர் மேகம் சூழ்ந்திருக்கிறது. தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா?’’ என்று சூடாகக் கேள்வியைக் கேட்டோம்.

‘‘மார்ச் 4 அல்லது 5 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியாக வேண்டும். இப்போதைய சூழ்நிலையில், அது சந்தேகம் தான். இந்திய எல்லையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி ஜனாதிபதி மாளிகையில் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். பாகிஸ்தானை ஒட்டியிருக்கும் ஐந்து மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால், இந்தச் சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது நன்றாக இருக்காது என்று உளவுத்துறையினர், மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம்’’.

“ஓ....’’

‘‘தேர்தல் சற்றுத் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை, விடுதலை செய்ய ஒப்புக்கொண்டதன் மூலமாக, ‘நாங்கள் சண்டையை விரும்பவில்லை’ என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். எனவே, இந்தியத் தரப்பிலும் இறங்கிப்போகவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.   இதற்கு மேல் போர் அல்லது, தாக்குதல் நடக்க வாய்ப்பில்லை!’’

‘‘நம்ம ஊருக்கு வாரும்...இரட்டை இலை இ.பி.எஸ் –ஓ.பி.எஸ் அணிக்கே கிடைத்துவிட்டதே?’’

‘‘ஆமாம். இதில் ஓ.பி.எஸ் தரப்பைவிட இ.பி.எஸ்ஸுக்குதான் அதிக மகிழ்ச்சி. தே.மு.தி.க இன்னும் இழுத்தடிப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்!’’

‘‘என்னதான் சிக்கலாம்?’’

‘‘பி.ஜே.பி அணியில்  சேருவது என்று தே.மு.தி.க முதலிலேயே முடிவெடுத்திருந்தது. விஜயகாந்த் வீ்ட்டுக்கு பியூஷ் கோயல் வந்து பேசியபோது, விஜயகாந்த் தரப்பில் வைத்த டிமாண்டை ஓகே சொல்ல முடியாமல் டெல்லிக்குச் சென்றுவிட்டார் கோயல். அதன்பிறகு அமைச்சர் தங்கமணி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திடீரென ஸ்டாலின் வந்து விஜயகாந்த்தைப் பார்த்ததும், தி.மு.க பக்கமாகச் சாயும் முடிவுக்கு தே.மு.தி.க வந்தது. ஒரு ராஜ்யசபா சீட் தர ஒப்புக்கொண்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். அதன் பிறகு, சுதீஷ் மற்றும் சபரீசன் தரப்பில், சென்னையில் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடத்திவந்தார்கள். நான்கு லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் தர தி.மு.க தயாராக இருந்தது. ஆனால், தே.மு.தி.க தரப்பில் ஆறு ப்ளஸ் ஒன்று,  செலவுக்கு வேண்டிய தொகை என்று பட்டியலை நீட்டியதால் அங்கேயும் சிக்கலாகிவிட்டது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close