‘‘தேர்தலுக்குப் பிறகு ‘பொலிட்டிக்கல் மிராக்கிள்’!’’ - தெறிக்கவிடும் தங்க தமிழ்செல்வன் | Dinakaran supporter Thanga TamilSelvan interview- Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

‘‘தேர்தலுக்குப் பிறகு ‘பொலிட்டிக்கல் மிராக்கிள்’!’’ - தெறிக்கவிடும் தங்க தமிழ்செல்வன்

ரண்டு அசுரக் கூட்டணிகளுக்கு மத்தியில் சூறாவளிச் சுற்றுப்பயணம், அதிரடி  அறிக்கைகள் என ‘ஒன் மேன் ஷோ’வாகக் கலக்கிவருகிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரின் முக்கியத் தளபதியாகக் கருதப்படும் அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்செல்வனிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளன. நீங்கள் தனித்துவிடப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?”

‘‘அவர்கள் அமைத்திருப்பது பலமான கூட்டணி அல்ல. சந்தர்ப்பவாத கூட்டணி. நேற்றுவரை அ.தி.மு.க–வைக் கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பா.ம.க., இன்று விருந்து அளித்துக் கூட்டணி அமைத்துள்ளது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முயல் - ஆமை கதையில், ஆமை ஜெயித்தது போன்று நாங்கள் ஜெயிப்பது உறுதி.’’

[X] Close

[X] Close