நேருவை ஓரங்கட்ட நிறுத்தப்படும் வைகோ? - திருச்சியில் திருப்புமுனை | Vaiko contest in Trichy constituency? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

நேருவை ஓரங்கட்ட நிறுத்தப்படும் வைகோ? - திருச்சியில் திருப்புமுனை

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஓரங்கட்டும் வகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்போகிறார்கள், அங்கு வைகோ போட்டியிடுவார் என்ற தகவல் திருச்சி தி.மு.க-வுக்குள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில், தி.மு.க-ம.தி.மு.க இடையே பல காய்நகர்த்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 

திருச்சியில் நடந்துவரும் இந்த அரசியல் மல்லுக்கட்டு குறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், “முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர், ம.தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் வீரபாண்டியன். இவர் 20 வருடங்களுக்கு முன்பு, அன்பில் தர்மலிங்கம் குறித்த புத்தகம் ஒன்றை எழுதி, வைகோ-வை வைத்து வெளியிட முயற்சி எடுத்தார். சில அரசியல் காரணங்களால் அது தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை அச்சிட்டு, வைகோவை வைத்தே வெளியிட்டார். அன்பில் குடும்ப விசுவாசம் காரணமாக, திருச்சி மாவட்ட அரசியலில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு எதிராகவே வீரபாண்டியன் அரசியல் செய்கிறார். இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள தங்களுக்கு திருச்சி தொகுதியைக் கேட்டுவாங்கி, வைகோவைப் போட்டியிடவைக்கலாம் என வீரபாண்டியன் திட்டமிட்டார்” என்ற அவர், மேலும் தொடர்ந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close