“டாஸ்மாக் அருகில் பக்கோடா கடை நடத்துவார்களா?” | CPI conduct Political Conference in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

“டாஸ்மாக் அருகில் பக்கோடா கடை நடத்துவார்களா?”

பா.ம.க-வைச் சீண்டிய பாலகிருஷ்ணன்

“இந்தியாவை மீட்போம் தமிழகத்தைக் காப்போம்! என்கிற முழக்கத்துடன் கோவையில் அரசியல் எழுச்சி மாநாட்டைக் கடந்த 27-ம் தேதி நடத்தியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முதலில் பேசிய  சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், “இந்த மாநாட்டை வ.உ.சி மைதானத்தில் நடத்த முதலில் சம்மதித்த அதிகாரிகள், பின்பு மேலிடத்து உத்தரவு என்று கூறி மறுத்துவிட்டார்கள். சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பதுபோல எடப்பாடி நினைக்கிறார். அரசு இடம் கொடுக்காவிட்டாலும் மாநாடு வெற்றிகரமாக நடக்கும். முதல்வரே நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்” என்றார்.

அடுத்துப்பேசிய கே.எஸ்.அழகிரி, “இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி சீரழித்திருக்கிறார். எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. செயல் திட்டம் இல்லாத அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யால் இந்த நாடு பின்னோக்கிச் சென்றிருக்கிறது. எந்தக் கொள்கையும் இல்லாத அ.தி.மு.க கூட்டணி துடைத்தெறியப்பட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close