வனங்களை விட்டு துரத்தப்படும் பழங்குடிகள்! - 11 லட்சம் பேர் எங்கே போவார்கள்? | SC stays 11 Lakh Tribals eviction order - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

வனங்களை விட்டு துரத்தப்படும் பழங்குடிகள்! - 11 லட்சம் பேர் எங்கே போவார்கள்?

னங்களில் காலம்காலமாக வசித்துவரும் 11 லட்சம் பழங்குடியினரை வனங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, பழங்குடி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஓர் உத்தரவு வருவதற்கு, மத்திய அரசின் நடவடிக்கைகளே காரணம் என்று பழங்குடி அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள்.

பழங்குடி மக்களின் நலனுக்காகவும், வனம் மீதான அவர்களின் உரிமைகளுக்காகவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ‘வன உரிமைகள் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. பாரம்பர்யமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டபூர்வமாக விண்ணப்பித்து, அவர்கள் தங்களை உறுதிசெய்து  கொள்ளவேண்டும் என்கிறது, இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்க்கும் சிலர், ‘இந்தச் சட்டம், வனப்பகுதிகளுக்குள் நில ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கிறது. இதனால், வனப்பரப்பு குறைகிறது. பழங்குடி மக்களால், வனத்தின் பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம்சாட்டினர். இத்தகைய வாதங்களுடன் தொடரப்பட்ட வழக்கு, சுமார் பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

[X] Close

[X] Close