ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

ஆஹான்

 

Araathu R
கையில் வானளாவிய அதிகாரம் இருந்தாலும், அதையெல்லாம் பயன்படுத்தாமல் அதே கையைக்கொண்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் காலைக் கழுவிவிடுவதுதான் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் உச்சம்.

 Pa Raghavan
போரைக் கோருபவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை. பாகிஸ்தானில் இதுவரை ஆட்சி செய்தவர்களுடன் ஒப்பிட ஓரளவு பக்குவம் மிக்கவராக இம்ரான்கான் தெரிகிறார். உடனடியாக பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அபிநந்தனை விடுவிக்க ஆவன செய்வதே இந்திய அரசின் கடமை. இக்காலமும் இனி வரும் காலமும் யுத்தங்களால் எந்தப் பயனும் பெறாது.

 Narayanan Thirupathy
உலகிலேயே அரசாங்கத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் மத்தியில் மோடி அரசு – மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு : திமுக தலைவர் ஸ்டாலின்.

# உலகிலேயே ஒரு குடும்பத்திற்காகக் கட்சியை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணம் தேசிய அளவில் காங்கிரஸ் - மாநிலத்தில் தி மு க.

 Murugesh Babu
சொல்றது ஒண்ணு, செய்றது ஒண்ணுன்னு இருக்க... உம் பேர ராமதாஸ்னு மாத்திக்கோ!

 Tamilisai Soundararajan
பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் செயலாற்றிவந்த தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப்படையின் வீரத்திற்குத் தலை வணங்குகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை நிறைவேற்றிய இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close