“நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?” - நீதிபதிகள் காட்டம் | Nirmaladevi case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/03/2019)

“நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?” - நீதிபதிகள் காட்டம்

ல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப்பின் முருகனும், கருப்பசாமியும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுச் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

ஆனால், நிர்மலாதேவிக்குத் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது. நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துவரும்போது, பத்திரிகையாளர்களிடம் பேசவிடாமல், காவல்துறையினர் தடுப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தி, ‘நிர்மலாதேவியின் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றவேண்டும்’ என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை கடந்த 27-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலாதேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close