திருடப்பட்ட தேசம்! - சாட்டையை சுழற்றிய சாகோஸ் தீர்ப்பு... | International Court Of Justice says about Chagos Islands independence - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

திருடப்பட்ட தேசம்! - சாட்டையை சுழற்றிய சாகோஸ் தீர்ப்பு...

சாகோஸ் தீவு மக்களுக்கு, பிரிட்டிஷ் அரசு செய்துவந்த துரோகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சகோஸ் தீவுகளை ஆக்கிரமித்துள்ள பிரிட்டன், மீண்டும் அந்தத் தீவை மண்ணின் மைந்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது, அந்தத் தீர்ப்பு. ஆனால், சகோஸ் தீவுகள் அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத்தளமாகியிருப்ப தால், இரு நாடுகளும் என்ன செய்யப் போகின்றன என்று உற்றுநோக்கத் தொடங்கியிருக்கிறது சர்வதேச சமூகம்.

இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு தென்மேற்காக இருக்கும் மாலத்தீவு நாட்டிலிருந்து சுமார் 500 கி.மீ தூரத்திலும், செஷல்ஸ் தீவுகளிலிருந்து சுமார் 2,000 கி.மீ தூரத்திலும், மொரீஷியஸ் தீவுகளிலிருந்து 2,500 கி.மீ தூரத்திலும் இருக்கும் சாகோஸ் தீவுக்கூட்டங்களை, 1814-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் மூலம் பிரான்ஸிடமிருந்து பிரிட்டன் கைப்பற்றியது. கறுப்பின மக்கள் கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்டு, பிரிட்டிஷாரின் பண்ணைகளில் அடிமைகளாக்கப்பட்டார்கள். 1969-ம் ஆண்டு ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றது மொரீஷியஸ். ஆனால், சுதந்திரத்துக்கு விலையாக சாகோஸ் தீவுகளைக் கேட்டது பிரிட்டன். வேறுவழியின்றி, டீகோ கார்சியா உள்ளிட்ட சாகோஸ் தீவுக் கூட்டங்களை, பிரிட்டனுக்குத் தாரைவார்த்தது மொரீஷியஸ். ஆனால், இந்த விஷயம் சகோஸ் தீவு மக்களுக்குத் தெரியாது. இதற்கு முன்னதாகவே புவிஅரசியல்ரீதியாக இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கண்காணிக்க சாகோஸ் தீவுகளை பிரிட்டனிடம் அமெரிக்கா கேட்டிருந்தது. அதனால், அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஹெரால்டு வில்சன், அமெரிக்காவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close