அறிவித்தார் ஜெயலலிதா... முடக்கினார் எடப்பாடி! - ‘கப்சிப்’ ஆனது காரைக்குடி ‘சிப்காட்’ | Karaikkudi Sipcot project is hold - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

அறிவித்தார் ஜெயலலிதா... முடக்கினார் எடப்பாடி! - ‘கப்சிப்’ ஆனது காரைக்குடி ‘சிப்காட்’

ன்னர்கள் காலத்திலேயே சீமை என்று பெயர் பெற்றது சிவகங்கை. ஆனால், மக்களாட்சி நடக்கும் காலத்தில், வளர்ச்சியில் சிவகங்கை பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. விவசாயமும் பெரிதாக இல்லை; வேலைவாய்ப்புக்கும் வழியில்லை. இந்த நிலையில்தான் இந்த மாவட்டத்தில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்குடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிப்காட் திட்டத்தை, எடப்பாடி பழனிசாமி அரசு முடக்கிவிட்டதாகப் புகார் வாசிக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் 110 விதியின்கீழ், சிவகங்கை உட்பட ஒன்பது மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவர் இருந்தவரை, இதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜெயலலிதா இத்திட்டத்தை அறிவித்தபோது, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமன், இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து, ‘இங்கு சிப்காட் அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், வருவாயும் அதிகரிக்கும்’ என்று தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு திட்ட அறிக்கை அனுப்பிவைத்தார்.

காரைக்குடி அருகேயுள்ள கழனிவாசல், திருவேலங்குடி கிராமங்களில் சிப்காட் அமைப்பதற்கு 1,300 ஏக்கர் நிலமும், மானாமதுரையில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் சிப்காட்டுக்கு கூடுதலாக 600 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. நிலத்தைக் கையகப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இழப்பீடு கொடுப்பதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, திட்ட அறிக்கையும் தயார் நிலையில் இருக்கும்போது திட்டம் முடக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close