கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம்... வாய்திறக்காத பிரதமர்! | Kanyakumari commercial port is Dropped? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/03/2019)

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம்... வாய்திறக்காத பிரதமர்!

ஓட்டுக்காக பின்வாங்கியதா பி.ஜே.பி?

ன்னியாகுமரியில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க, மீனவர்களின் எதிர்ப்பைமீறி மத்திய அரசு மும்முரம் காட்டிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பிரதமரின் அரசு நிகழ்ச்சியில் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் பேசவில்லை. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு அரசியலை முன்வைத்து பி.ஜே.பி பின்வாங்கிவிட்டது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 

‘சாகர்மாலா’ திட்டத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம், இனயத்தில் வர்த்தகத் துறைமுகம் அமைக்க 2015-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. தொலையா வட்டத்தில் வர்த்தகத் துறைமுகத்துக்கான அலுவலகத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். ஆனால், துறைமுகம் வந்தால் தங்கள் கிராமங்கள் அழிந்துவிடும் என மீனவர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கினார்கள். தொடர்ந்து கோவளம் முதல் மணக்குடி கிராமத்துக்கு உட்பட்ட கடற்கரைப் பரப்பில் வர்த்தகத் துறைமுகத் திட்டம் மாற்றப் பட்டது. இதனால், அந்தக் கிராமங்களின் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எதிர்ப்பைச் சமாளிக்க பி.ஜே.பி சார்பில் கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுக ஆதரவு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்த இயக்கம் சார்பில் துறைமுகத் திட்டம் வேண்டும் என்று பதிலடி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

[X] Close

[X] Close